டார்ஜிலிங்கில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தின் டார்ஜிலிங்கில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது.
கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் மாயமானநிலையில் ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது..
